
புயல் அச்சுறுத்தல் நீடிப்பதால் மீனவர்கள் கரைக்குத் திரும்ப அறிவுறுத்தல்
The story in brief
வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி வருவதால் திருவள்ளூர் மீனவர்கள் உடனடியாக கரைக்குத் திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளனர். புயல் உருவாக வாய்ப்புள்ளதால் 13-ந் தேதி முதல் அடுத்த அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க வேண்டாம் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தமிழகம் முழுவதும் 19-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.