
ராமநாதபுரம், தூத்துக்குடியில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு
The story in brief
ராமநாதபுரம், தூத்துக்குடி, கடலோர திருநெல்வேலி பகுதிகளில் இன்றும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நீலகிரி, கோவை, ஈரோடு பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மற்ற இடங்களில் இடியுடன் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நவம்பர் 13ம் தேதி தென் கிழக்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.