
மொகாலியில் இன்று இந்தியா-ஜப்பான் ஹாக்கி இறுதிப் போட்டி
The story in brief
பஞ்சாப் மாநிலம் மொகாலியில் இன்று நடைபெறும் 9வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியின் இறுதிப் போட்டியில் இந்தியாவும் ஜப்பானும் நேருக்கு நேர் மோதுகின்றன. அரையிறுதிப் போட்டியில் முறையே தென் கொரியா மற்றும் மலேசியாவை வீழ்த்தி இரு அணிகளும் முன்னேறியுள்ளன. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி சாம்பியன் பட்டம் வெல்லும்.