
கூட்டுறவு அங்காடிகளில் இன்று 10 மளிகைப் பொருட்கள் ரூ. 200-க்கு விற்பனை
The story in brief
விலைவாசி உயர்வால் பொதுமக்கள் அவதி அடைவதை தவிர்க்கும் வகையில் இன்று கூட்டுறவு அங்காடிகளில் 10 மளிகைப் பொருட்கள் ரூ. 200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அத்தியாவசியப் பொருட்களை குறைந்த விலையில் வாங்கும் வகையில் 128 விற்பனை நிலையங்கள் மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. சென்னையில் அமைச்சர் வி. காந்திராஜ் தொடங்கி வைத்த இந்த திட்டத்தில் தமிழக அரசு கொள்முதல் செய்யும் வெங்காயம் மற்றும் துவரம் பருப்பு அடங்கும்.