
சேலம் செல்போன் கோபுரத்தில் தொங்கிய முதியவர்
The story in brief
சேலம் சிவத்தபுரம் விஜயலட்சுமி நகரில் 100 அடி உயரமுள்ள செல்போன் கோபுரத்தில் ஏறி, தனது மகனை விடுவிக்கக் கோரி முதியவர் ஒருவர் கூச்சலிட்டார். பொதுமக்கள் அதிர்ச்சியில் அவரை கீழே இறங்க வலியுறுத்தியும் அவர் இறங்க மறுத்துவிட்டார். தனது மகன் ராமசாமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், மகனை விடுவித்தால் தான் இறங்குவேன் என்றும் சாகதேவன் கூறினார்.