
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்தியா சார்பில் விளையாடிய கிடாம்பி ஸ்ரீகாந்த் தோல்வி
The story in brief
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் 2-வது சுற்றில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். பிரான்ஸ் வீரர் அலெக்ஸ் லானருடன் நடந்த போட்டியில் ஸ்ரீகாந்த் முதல் செட்டை 21-11 என்ற புள்ளிக் கணக்கில் வென்றார். ஆனால், அடுத்த இரண்டு செட்களில் 21-15, 23-15 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வியடைந்தார். மூன்றாவது செட்டை இழந்த ஸ்ரீகாந்த் தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டார்.