
தமிழ் நாடு ஜெய்ப்பூரில் 274 ரன்களுக்கு ஆட்டமிழந்தது
The story in brief
ஜெய்ப்பூரில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை ஆட்டத்தின் 3-வது நாள் ஆட்டத்தில் 98.4 ஓவர்களில் 274 ரன்களுக்கு தமிழ்நாடு அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆண்ட்ரே சித்தார்த் 192 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 81 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ராஜஸ்தான் அணி தனது முதல் இன்னிங்ஸில் 115.3 ஓவர்களில் 363 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தமிழ்நாடு அணி 2-வது நாள் ஆட்டத்தில் 4 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் எடுத்தது. 4-வது நாள் ஆட்டத்தை ராஜஸ்தான் அணி இன்று தொடர்ந்து விளையாடுகிறது.