
மெக்கா, மதீனா தவிர்த்து மற்ற சவுதி விமான நிலையங்களை குறிவைத்து ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்.
The story in brief
ரியாத்தின் கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தில் ஏவுகணை தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டும், 300 பேர் காயமடைந்தும் உள்ள நிலையில் மெக்கா, மதீனா தவிர்த்து மற்ற சவுதி விமான நிலையங்களை குறிவைத்து ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்த எச்சரிக்கை விடுத்துள்ளனர். 24 மணி நேரத்தில் 225 விமானங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில் சவுதி விமான நிலையங்களுக்கு செல்ல வேண்டாம் என பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவுக்கான சேவையை பல விமான நிறுவனங்கள் நிறுத்தி உள்ளன.