
கிராம சபை கூட்டத்தில் சிப்காட் விரிவாக்கத்திற்கு கிராம மக்கள் போராட்டம்
The story in brief
தியாகவள்ளி ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் சிப்காட் விரிவாக்க திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் கருப்பு பட்டை அணிந்து தரையில் படுத்து போராட்டம் நடத்தினர். நொச்சிகாடு, குடிகாடு, தியாகவல்லி ஆகிய இடங்களில் விவசாய நிலங்களை கையகப்படுத்த அரசு திட்டமிட்டதற்கு தொடர் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.