
பெங்களூருவில் திரையரங்கின் கூரை இடிந்து விழுந்ததில் 5 பேர் காயம்
The story in brief
பெங்களூரு பாரதி திரையரங்கில் கன்னட படம் ஓடிக்கொண்டிருந்தபோது, திரையரங்கின் கூரை இடிந்து விழுந்ததில் மஞ்சுநாத், அவரது மனைவி உட்பட 5 பேர் காயமடைந்தனர். இதனால், பார்வையாளர்கள் வெளியே ஓடி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக திரையரங்க ஊழியர்கள் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். திரையரங்க உரிமையாளர் மீது தசரஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.