பூம்புகாரில் மேகதாது அணைக்கு முற்றுப்புள்ளி வைக்க விவசாயிகள் பிரச்சாரம்
The story in brief
மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டுவதை தடுக்க பூம்புகாரில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் பிரச்சாரம் துவங்கி உள்ளனர். அதற்கு பதிலாக ராசிமணலில் அணை கட்ட தமிழகத்தை வலியுறுத்தி உள்ளனர். தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதும் உள்ள விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து ராசிமணல் அணையை கட்ட வலியுறுத்த இந்த பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. செப்டம்பர் 23ம் தேதி சென்னையில் பிரச்சார கூட்டம் நடைபெற உள்ளது. 24ம் தேதி திருவாரூரில் நிறைவடைகிறது.