
மருந்து கடைகளில் மருந்து விற்பனையை கண்காணிக்க சிசிடிவி கேமராக்கள்
The story in brief
மருத்துவரின் பரிந்துரை இல்லாமல், அட்டவணை எச், எச்1 மற்றும் எக்ஸ் வகை மருந்துகள் விற்பனையை கண்காணிக்க, மருந்து கடைகளில் சிசிடிவி கேமராக்களை நிறுவ மத்திய சுகாதார அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. மருத்துவரின் பரிந்துரை இல்லாமல், தூக்க மாத்திரைகள், வலி நிவாரணிகள் மற்றும் பிற கட்டுப்படுத்தப்பட்ட மருந்துகளை விற்பனை செய்வதை தடுப்பதே இதன் நோக்கம். கருத்துகளையும் ஆலோசனைகளையும், சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் துணைச் செயலாளர் (மருந்துகள்) அவர்களுக்கு அனுப்பலாம்.