
இன்று தமிழகத்தில் 6 மாவட்டங்களில் பலத்த மழை
The story in brief
தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். தமிழகத்தின் பிற பகுதிகளிலும், புதுச்சேரியிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் செப்டம்பர் 18-ம் தேதி கனமழை பெய்யக்கூடும்.