Question Everything. See who's reporting it.

மகாராஷ்டிரா நெடுஞ்சாலையில் கார்-லாரி மோதி 9 பேர் பலி

Source: Hindu Tamil Thisai

The story in brief

பண்டாரா மாவட்டத்தில் நாக்பூர்-ராய்ப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக வந்த கார் லாரி மீது மோதியதில் எட்டு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். நான்கு பேர் காயமடைந்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒரு பெண் பின்னர் உயிரிழந்தார். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை ஒன்பதாக உயர்ந்துள்ளது. விபத்து பிம்பல்காவ் அருகே அதிகாலை நடந்தது.

NEWXFree on Android and iPhone. Open in NEWX